Thursday, September 20, 2012

ICC T20 உலகக்கிண்ணம் 2012 ::::....


ICC T20 - 2012
 
 
 
 
2012 ஆண்டுக்கான "ICC T20" கிரிக்கெட் போட்டிகள் இம்முறை இலங்கையில் மிகவும் கோலாகலமாக இம்மாதம் 18ம் திகதி (18-09-2012) ஆரம்பித்துள்ளது.

எனவே இப்போட்டியில் பங்குபற்றும் அணிகள் அவ் அணிகள் அடங்கியுள்ள குழுக்கள் மற்றும் போட்டிகள் இடம்பெறும் திகதிகள் இடங்கள் போன்ற விபரங்களை உங்களுக்காக எனது இந்த தளத்தில் குறிப்பிடுகின்றேன்.

 
Group A – England, India, Afghanistan
Group B – Australia, West Indies, Ireland
Group C – Sri Lanka, South Africa, Zimbabwe
Group D – Pakistan, New Zealand, Bangladesh
 
Warm Up Matches Details
 
Thu Sep 13
09:30 local | 04:00 GMT
Warm Up : 1st T20 -Ireland vs Zimbabwe
Moors Sports Club Ground, Colombo
Thu Sep 13
09:30 local | 04:00 GMT
Warm Up : 2nd T20 -Sri Lanka vs West Indies
Nondescripts Cricket Club, Colombo
Sat Sep 15
09:30 local | 04:00 GMT
Warm Up : 3rd T20 -Afghanistan vs Sri Lanka A
Moors Sports Club Ground, Colombo
Sat Sep 15
09:30 local | 04:00 GMT
Warm Up : 4th T20 -Australia vs New Zealand
Nondescripts Cricket Club, Colombo
Sat Sep 15
09:30 local | 04:00 GMT
Warm Up : 5th T20 -Bangladesh vs Zimbabwe
Colts Cricket Club Ground, Colombo
Sat Sep 15
09:30 local | 04:00 GMT
Warm Up : 6th T20 -India vs Sri Lanka
P Sara Oval, Colombo
Mon Sep 17
09:30 local | 04:00 GMT
Warm Up : 7th T20 -Australia vs England
Nondescripts Cricket Club, Colombo
Mon Sep 17
09:30 local | 04:00 GMT
Warm Up : 8th T20 -Bangladesh vs Ireland
Moors Sports Club Ground, Colombo
Mon Sep 17
09:30 local | 04:00 GMT
Warm Up : 9th T20 -New Zealand vs South Africa
Colts Cricket Club Ground, Colombo
Mon Sep 17
14:00 local | 08:30 GMT
Warm Up : 10th T20 -Afghanistan vs West Indies
P Sara Oval, Colombo
Mon Sep 17
14:00 local | 08:30 GMT
Warm Up : 11th T20 -India vs Pakistan
R Premadasa Stadium, Colombo
Wed Sep 19
09:30 local | 04:00 GMT
Warm Up : 12th T20 -England vs Pakistan
P Sara Oval, Colombo
League Matches Details

1
09/18/12
14:00 GMT | 19:30 local
1st Match, Group C - Sri Lanka v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota

2
09/19/12
10:00 GMT | 15:30 local
2nd Match, Group B - Australia v Ireland
R Premadasa Stadium, Colombo


3
09/19/12
14:00 GMT | 19:30 local
3rd Match, Group A - Afghanistan v India
R Premadasa Stadium, Colombo
 
4
09/20/12
14:00 GMT | 19:30 local
4th Match, Group C - South Africa v Zimbabwe
Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota

5
09/21/12
10:00 GMT | 15:30 local
5th Match, Group D - Bangladesh v New Zealand
Pallekele International Cricket Stadium
 


6

09/21/12

14:00 GMT | 19:30 local

6th Match, Group A - Afghanistan v England

R Premadasa Stadium, Colombo
 
7
09/22/12
10:00 GMT | 15:30 local
7th Match, Group C - Sri Lanka v South Africa
Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota

8
09/22/12
14:00 GMT | 19:30 local
8th Match, Group B - Australia v West Indies
R Premadasa Stadium, Colombo

9
09/23/12
10:00 GMT | 15:30 local
9th Match, Group D - New Zealand v Pakistan
Pallekele International Cricket Stadium

10
09/23/12
14:00 GMT | 19:30 local
10th Match, Group A - England v India
R Premadasa Stadium, Colombo

11
09/24/12
14:00 GMT | 19:30 local
11th Match, Group B - Ireland v West Indies
R Premadasa Stadium, Colombo

12
09/25/12
14:00 GMT | 19:30 local
12th Match, Group D - Bangladesh v Pakistan
Pallekele International Cricket Stadium

Super 8 Matches Details



Semi Final

1st Semi final                                       -  Srilanka Vs Pakistan
Oct.4th , 7.00 PM
R.Piremadasa Stadium,Colombo.

                                   "Won the match - Srilanka."

2nd Semi Final                                     - West Indias Vs Austrelia
Oct.5th, 7.00 PM
R.Piremadasa Stadium,Colombo.

                                   "Won the match - West Indias."


Final

Oct.7th, 7.00 PM                              - West Indias Vs Srilanka
R.Piremadasa Stadium,Colombo.

 " Won The ICC T20_2012 Cub - West Indias."
 
 




Creat By :- V.Mathumenan.
 

Thursday, July 26, 2012

ஒலிம்பிக் 2012 - லண்டன்

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games )-2012.

எனது இந்த பக்கத்தில் எதிர்வரும் 28-07-2012 ம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் மாநகரில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் பற்றி சிறிய தொகுப்பு ஒன்றை சமர்ப்பிக்கின்றேன்.

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1896 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.



ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.







கடைசியாக 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடந்தது. இந்த ஆண்டுக்கான (2012) 30-வது ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 12-ந்தேதி வரை இந்த ஒலிம்பிக் திருவிழா நடைபெறுகிறது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 5 கண்டங்களில் உள்ள 204 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10,490 வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். 26 விளையாட்டில் 39 பந்தயத்தில் 302 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.



ஒலிம்பிக் ஸ்டேடியம் உள்பட 34 மைதானங்களில் போட்டி நடக்கிறது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 13 விளையாட்டுகளில் இருந்து 81 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதில் துப்பாக்கி சுடுதல், பேட்மின்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று வரலாறு படைத்தார். அதோடு குத்தச்சண்டையில் விஜேந்தர்சிங்கும், மல்யுத்தத்தில் சுசில் குமாரும் வெண்கலப் பதக்கம் பெற்றனர். மொத்தம் 3 பதக்கம் கிடைத்தது.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அதைவிட கூடுதலான பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதிக பதக்கங்களை வெல்வதில் அமெரிக்கா, சீனா, ரஷியா இடையே கடும் போட்டி நிலவும்.

நாளைய தொடக்க விழா மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் கலச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் டைரக்டர் டேனி பாயல் மேற்பார்வையில் தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. 3 மணி நேரம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிரபல இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் தொடக்க விழா நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றது. கால்நடைகளான ஆடு, கோழி மற்றும் குதிரைகள் ஆகியவைகளை வைத்தும் பிரமிப்புட்டும் வகையில் நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியையொட்டி லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் கிராமம், ஸ்டேடியங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1908, 1948-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி அங்கு நடந்தது. ஒலிம்பிக் போட்டி 3-வது முறையாக நடைபெறும் முதல் நகரம் என்ற பெருமையை லண்டன் பெற்று உள்ளது.
                                                                              நன்றி.
Create By:-
                    V.Mathumenan.